Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு... கண்டித்து 20ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு... கண்டித்து 20ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

By: Nagaraj Thu, 13 July 2023 6:41:59 PM

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு... கண்டித்து 20ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: அதிமுக வரும் 20ம் தேதி ஆர்ப்பாட்டம்... அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்து வகையான உணவுப் பொருட்களினுடைய விலையும் அதிகரித்து இருப்பதை கண்டித்து ஜூலை 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி கே பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, சீரகம் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை அதிகரித்து இருக்கிறது. இதை தடுத்து நிறுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும்.

அதோடு தமிழ்நாட்டின் உள்ள பல்வேறு துறைகளில் நடைபெறும் ஊழல்களை கண்டும் கோணாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக முதல்வரை கண்டித்தும் வரும் ஜூலை 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

demonstration,next 20th,district capital,aiadmk,announcement ,ஆர்ப்பாட்டம், வரும் 20ம் தேதி, மாவட்ட தலைநகர், அதிமுக, அறிவிப்பு

மேலும் நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் காய்கறிகள் விற்கப்படுகிறது என்று தம்பட்டம் அடிக்கும் திமுக அதை முறைப்படுத்த தவறிவிட்டது. இதனால் நியாய விலைக் கடைகளை நம்பி செல்லும் மக்கள் ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர். மேலும் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலம் மின்வெட்டு என்ற பிரச்சினையே இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தமிழகம் மீண்டும் மின்வெட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதனால் சிறு குறு தொழில்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கின்றன என்று திமுக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். இவற்றைக் கண்டித்து வரும் 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|