Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பிறந்தநாள் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பிறந்தநாள் வாழ்த்து

By: vaithegi Fri, 12 May 2023 1:06:40 PM

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: சேலம் இல்லத்தில் கட்சியினர் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர் எடப்பாடி பழனிசாமி .... முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை மற்றும் ஒற்றை தலைமை பிரச்னையை அடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை ஆடுது இதுதொடர்பாக நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு மனு அளித்திருந்தது. இருந்தாலும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அதிமுகவின் திருத்த விதிகளும் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்து இருந்தது.

happy birthday,aiadmk,edappadi palaniswami ,பிறந்தநாள் வாழ்த்து, அதிமுக, எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இதையடுத்து அவரது பிறந்தநாளை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கட்சியினர் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர் இபிஎஸ். பிரமாண்ட மாலையை பத்து பேர் தூக்கி வந்து எடப்பாடி பழனிசாமிக்கு அணிவித்தனர். இதுபோன்று, அதிமுக பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ் பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மண் சோறு சாப்பிட்டார்.

Tags :
|