Advertisement

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது

By: vaithegi Sun, 16 Apr 2023 10:18:24 AM

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது

சென்னை: அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறவுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, இன்று நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதலும் அங்கீகாரமும் வழங்கப்பட இருக்கிறது.

மேலும் அதிமுகவில் கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

aiadmk,working committee meeting,edappadi palaniswami ,அதிமுக, செயற்குழு கூட்டம்,எடப்பாடி பழனிசாமி

இதையடுத்து இச்செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது பற்றியும் முடிவு செய்யப்படவுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதலான அதிகாரம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இக்கூட்டத்தில் கா்நாடக தோ்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது.

Tags :
|