Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரியர் தேர்வு மாணவர் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது; ஏஐசிடிஇ ஐகோர்ட்டில் திட்டவட்டம்

அரியர் தேர்வு மாணவர் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது; ஏஐசிடிஇ ஐகோர்ட்டில் திட்டவட்டம்

By: Monisha Wed, 30 Sept 2020 4:39:16 PM

அரியர் தேர்வு மாணவர் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது; ஏஐசிடிஇ ஐகோர்ட்டில் திட்டவட்டம்

அரியர் தேர்வு மாணவர் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது என சென்னை ஐகோர்ட்டில் ஏஐசிடிஇ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடைபெற இருந்த கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது. இதே போல் அரியர் தேர்வு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரியர் தேர்வு மாணவர் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது என்று சென்னை ஐகோர்ட்டில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

arrear exam,ugc,aicte,high court,college ,அரியர் தேர்வு,யுஜிசி,ஏஐசிடிஇ,ஐகோர்ட்,கல்லூரி


மேலும், கல்லூரி இறுதிப்பருவ தேர்வை கண்டிப்பாக நடத்தவேண்டும். அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டம் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

முன்னதாக அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஏஐசிடிஇ இந்த பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

Tags :
|
|