Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளியால் புதுவையில் காற்று மற்றும் இரைச்சலால் அதிக பாதிப்புகள் ... மாசு கட்டுப்பாடு வாரியம்

தீபாவளியால் புதுவையில் காற்று மற்றும் இரைச்சலால் அதிக பாதிப்புகள் ... மாசு கட்டுப்பாடு வாரியம்

By: vaithegi Fri, 28 Oct 2022 6:49:35 PM

தீபாவளியால்  புதுவையில் காற்று மற்றும் இரைச்சலால் அதிக பாதிப்புகள்  ...   மாசு கட்டுப்பாடு வாரியம்

புதுவை: நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில வருடங்களாகவே காற்று அதிக மாசு அடைந்து நகர் முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்து கொண்டு வருகிறது.

இதனை அடுத்து கடந்த திங்கட்கிழமை அன்று தான் தீபாவளி பண்டிகை முடிந்துள்ளது. அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் காரணமாக புதுச்சேரி முழுவதும் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதுவையின் முக்கிய பகுதிகளான ரெட்டியார்பாளையம், முதலியார்பேட்டை மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டது.

pollution control board,puduvai ,மாசு கட்டுப்பாடு வாரியம்,புதுவை

இந்த ஆய்வின் முடிவில் PM (10) மற்றும் PM (2.5) அளவுகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல், புதுவையின் இரைச்சல் மாசு ஆனது, பல பகுதிகளிலும் 22 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மேலும் இந்த அளவுகள் முந்தையை அளவுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக இருப்பதாக மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags :