Advertisement

ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது ஏர் கனடா

By: Nagaraj Sat, 16 May 2020 3:46:41 PM

ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது ஏர் கனடா

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏர் கனடா விமான நிறுவனம், தங்களது ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

தனது 38,000 ஊழியர்களில் குறைந்தபட்சம் 20,000 ஊழியர்களை இது பாதிக்கும் எனவும், இந்த எண்ணிக்கை 22,800 வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிநீக்க நடவடிக்கை எதிர்வரும் மாதம் ஜூன் 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.


Tags :
|