Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையிலிருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து

சென்னையிலிருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து

By: vaithegi Sat, 24 June 2023 09:51:36 AM

சென்னையிலிருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து

சென்னை: தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து ........ சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 5 மணிக்கு 122 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பயணிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்ட தொழிலுட்பக்கோளாறு கண்டறியப்பட்டதன் காரணமாக இன்று காலை அந்தமானுக்கு புறப்பட இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

air india flight,chennai ,ஏர் இந்தியா விமானம்,சென்னை


மேலும் பயணிகளுக்கு இதற்கு பதிலாக மாற்று விமானம் இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 122 பயணிகளும் அந்தமானுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில்,

விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்து உள்ளனர். நாளை பயணிகளுக்கான விமான டிக்கெட்டிற்கான பணம் திருப்பி தரப்படும் என்று கூறப்படுகிறது.

Tags :