Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குறிப்பிட்ட ஊழியர்களை சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் முடிவு

குறிப்பிட்ட ஊழியர்களை சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் முடிவு

By: Karunakaran Thu, 23 July 2020 6:54:53 PM

குறிப்பிட்ட ஊழியர்களை சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் முடிவு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் விமான சேவை முற்றிலும் முடங்கியது. மே 25-ந்தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவை மட்டுமே நடைபெற்று வருகிறது. சுமார் 50 சதவீதம்தான் உள்நாட்டு விமான சேவை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இதன் காரணமாக பணியாளர்கள் சிலரை சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்பு முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அறிக்கை தயாரிக்க பொது மேலாளர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. தற்போது, தரம் பிரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுக்க ஏர் இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது.

air india,employees,compulsory leave,pay ,ஏர் இந்தியா, ஊழியர்கள், கட்டாய விடுப்பு, ஊதியம்

ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில பணியாளர்கள் 6 மாதம் முதல் இரண்டு வருடம் வரை சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். இது ஐந்து வருடம் வரைக்கூட நீட்டிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருந்தக்கூடிய தன்மை, செயல்திறன், திறன், செயல்திறனின் தரம், பணியாளரின் ஆரோக்கியம், உடல்நலக்குறைவால் உடனடியாக வேலைக்கு வர இயலாதவர்கள் என்ற அடிப்படையில் பணியாளர்கள் தரம் பிரிக்கப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Tags :