Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவை எட்டியது .. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவை எட்டியது .. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

By: vaithegi Fri, 03 Nov 2023 1:53:12 PM

டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவை எட்டியது .. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

புது டெல்லி : தலைநகர் டெல்லியில், அடிக்கடி காற்று மாசு அபாயகரமான நிலைக்கு செல்வதுண்டு. அந்த வகையில், டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவை எட்டிய நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அதன்படி, டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து உள்ள நிலையில், இன்று காலை பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியம் இல்லாத கட்டுமானப் பணிகளுக்கு தடை, டீசல் லாரிகள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

controls,delhi,air pollution ,கட்டுப்பாடுகள் ,டெல்லி, காற்று மாசுபாடு


பொதுமக்கள் வசதிக்காக மெட்ரோ ரயில் தினசரி கூடுதலாக 20 சேவைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 2 நாட்களுக்கு அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் விடுமுறை அறிவித்து உள்ளார்.

இந்த 2 நாட்களும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது ஏற்பட்டு உள்ள காற்று மாசு உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களையும் பாதிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.


Tags :
|