Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் மழை பொழிவுக்கு பிறகு காற்றின் தரம் சற்று உயர்வு

டெல்லியில் மழை பொழிவுக்கு பிறகு காற்றின் தரம் சற்று உயர்வு

By: vaithegi Sat, 11 Nov 2023 5:25:35 PM

டெல்லியில் மழை பொழிவுக்கு பிறகு காற்றின் தரம் சற்று உயர்வு

புது டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைய எட்டி கொண்டு வருகிறது. இதனால், மக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்வதற்கே சிரமப்படும் அளவுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து இந்த காற்று மாசுவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தீவிர வாகன கட்டுப்பாடு, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை, தண்ணீர் லாரி மூலம் நீர் பீய்ச்சி அடிப்பது, செயற்கை மழை பொழிவு என்று பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டு வருகிறது.

air quality,delhi,rainfall ,காற்றின் தரம்,டெல்லி, மழை பொழிவு

இந்த நிலையில், டெல்லியில் பெய்த மழை காரணமாக காற்றின் தரம் மிக மோசமான நிலை என்ற நிலையிலிருந்து மோசமான நிலைக்கு முன்னேறியுள்ளது. மழைக்கு முன்னர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய காற்றின் தர அளவீட்டில் 407 ஆக இருந்த காற்று மாசு அளவு, தற்போது 361ஆக குறைந்துள்ளளது.

டெல்லியில் , நேற்று காலை 10 மணியளவில், மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் காற்றின் தரம் 407 ஆக இருந்தது. ஷாதிபூரில், 405 ஆக இருந்தது. சோனியா விஹார் 399, அசோக் விஹார் 390, பவானா 389, வசீர்பூர் 385, ITO மற்றும் ஜஹாங்கிர்புரி ஆகிய இரண்டும் 381 என்று காற்று மாசு பதிவாகி இருந்தது.தற்போது, காற்று மாசு அளவானது, டெல்லியில் ஆனந்த் விஹார் 295, ஆர்.கே.புரம் 230, பஞ்சாபி பாக் 244, மற்றும் ITO 263 என பதிவாகிவுள்ளது.

Tags :
|