Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி நகரில் காற்று தரம் சற்று முன்னேற்றம் .. கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து

டெல்லி நகரில் காற்று தரம் சற்று முன்னேற்றம் .. கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து

By: vaithegi Tue, 21 Nov 2023 1:29:53 PM

டெல்லி நகரில் காற்று தரம் சற்று முன்னேற்றம் ..  கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து

புது டெல்லி: டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடப்பட்டிருந்த குளிர்கால விடுமுறையானது முடிவடைந்து மீண்டும் அனைத்து பள்ளிகளும் நேற்று முதல் திறப்பு ...டெல்லி நகரில் கடந்த சில வாரங்களாகவே காற்று மாசுபாடு மிகவும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் குழந்தைகளின் நலன் கருதி முன்னதாக நவம்பர் 10-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் புகை மூட்டம் அதிகரித்ததன் காரணமாக ஜனவரி மாதம் வழங்கப்படும் குளிர்கால விடுமுறையை மாற்றி நவம்பர் 18ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டது.

controls,delhi,air quality,winter vacation ,கட்டுப்பாடுகள் ,டெல்லி , காற்று தரம் ,குளிர்கால விடுமுறை


இதையடுத்து தீபாவளிக்கு பின்னர் பட்டாசு வெடித்ததன் காரணமாக மாசு அளவு அதிகரித்ததால் இயல்பு நிலை திரும்ப அதிக காலம் எடுத்துக் கொண்டது.

இந்நிலையில் குளிர்கால விடுமுறை முடிவடைந்து டெல்லி நகரில் அனைத்து பள்ளிகளும் நேற்று ( நவ.20 ) மீண்டும் செயல்படத் தொடங்கியது. மேலும் நகரில் காற்று தரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. தொடர்ந்து GRAP -யின் நிலை IV கீழ் அளிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Tags :
|