Advertisement

விமான முன் பதிவு கட்டணங்கள் வெகுவாக உயர்வு

By: vaithegi Sat, 28 Jan 2023 8:41:06 PM

விமான முன் பதிவு கட்டணங்கள் வெகுவாக உயர்வு

புதுடெல்லி: முன் பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு ..... கொரோனா பாதிப்புகளின் போது, 2020-ல், விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு ஒன்றை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் விதித்திருந்தது. இதையடுத்து சூழல்களுக்கு ஏற்ப மாற்றப்பட்ட இந்த உச்ச வரம்பு, 2022 ஆகஸ்ட் 31-ல் ரத்து செய்யப்பட்டது.

இதனை அடுத்து அதன் பிறகு விமானக் கட்டணங்கள் படிப்படியாக அதிகரிக்க தொடங்கி, கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையின் போது வெகுவாக உயர்ந்தது. தற்போது சற்று குறைந்துள்ள நிலையில், கோடை விடுமுறை காலத்திற்கான முன் பதிவு கட்டணங்கள் வெகுவாக உயர்ந்துள்ளன.

fares,air transport ,கட்டணங்கள் , விமானப் போக்குவரத்து

அதனை அடுத்து ஏப்ரல், மே மாதங்களில், சென்னை கோவா பயணத்திற்கான கட்டணம் 4 ஆயிரத்து 400 ரூபாயாகவும், சென்னை டெல்லி கட்டணம் 6 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

மேலும் சென்னை மதுரை கட்டணம் 4 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னை துபாய் பயணக் கட்டணம் 16 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

Tags :
|