Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக வங்கி புதிய தலைவராக அஜய் பங்கா நியமனம்: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவிப்பு

உலக வங்கி புதிய தலைவராக அஜய் பங்கா நியமனம்: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவிப்பு

By: Nagaraj Sun, 26 Feb 2023 9:26:57 PM

உலக வங்கி புதிய தலைவராக அஜய் பங்கா நியமனம்: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவிப்பு

வாஷிங்டன்: உலக வங்கியின் புதிய தலைவராக அஜய் பங்கா என்ற இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

உலக வங்கியின் தலைவராக இருக்கும் டேவிட் மல்பஸின் பதவிக்காலம் 2024 ஏப்ரல் வரை உள்ளது. இந்நிலையில் ஜூன் மாதம் பதவி விலகுவதாக மால்பஸ் கடந்த வாரம் அறிவித்தார். மே மாதம் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உலக வங்கியின் புதிய தலைவராக அஜய் பங்கா என்ற இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். உலக வங்கியின் இயக்குநர்கள் குழு இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தால், உலக வங்கியின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை அஜய் பங்கா பெறுவார்.

joe-biden,us-president,washington, ,அஜய் பங்கா, இந்தியர், ஜோ பைடன்

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விஷயங்களில் அஜய் நிபுணர் என்றும், உலக வங்கியை திறமையாக நிர்வகிப்பார் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பாராட்டியுள்ளார். உலகில் உள்ள திறமையான மனிதர்களில் இவரும் ஒருவர். 187 நாடுகளின் குழுவான உலக வங்கி, வளரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு தொடர்பான திட்டங்களுக்கு கடன் வழங்குகிறது.

அஜய் பங்கா 1981 ஆம் ஆண்டு நெஸ்லே இந்தியாவில் தனது பணியைத் தொடங்கினார். 13 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பிறகு, பெப்சிகோவில் சேர்ந்தார். பின்னர் சிட்டி குழுமத்தில் பணிபுரிந்த அஜய், டச்சு முதலீட்டு நிறுவனமான ‘எக்ஸார்’ தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கடைசியாக மாஸ்டர்கார்டின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய அஜய், 2021-ல் ஓய்வு பெற்றார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்தவர் அஜய் பங்கா. அஜய் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பஜன் பங்காவின் மகன். ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் படித்த இவர்,

டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ முடித்தார். பொருளாதாரம் படித்தார். பின்னர் ஐஐஎம்-அகமதாபாத்தில் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய அரசு அஜய் பங்காவை 2016 ஆம் ஆண்டு பத்ம விருது வழங்கி கௌரவித்தது.

Tags :