ஐபிஎல் போட்டியை பார்க்க சென்ற இடத்தில் முதல்வருடன் கை குலுக்கிய அஜித் மகன்
By: Nagaraj Sat, 22 Apr 2023 6:23:39 PM
சென்னை: ஐபிஎல் போட்டியை காண சென்ற போது நடிகர் அஜித் மகன் முதல்வர் ஸ்டாலினுடன் கைகுலுக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் செம வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் தனக்கென பல ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித். இவர் சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் தன்னுடைய குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.
அஜித் தனது குடும்பத்துடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகிவிடும்.
இந்நிலையில் 2023 -ம் ஆண்டின் ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் CSK அணி SRH அணியுடன் மோதியது.
அஜித்தின் குடும்பத்தார், முதலமைச்சர் குடும்பத்துடன் போட்டியை கண்டனர். அங்கு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் அஜித் மகன் முதல்வர் ஸ்டாலினுடன் கைகுலுக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் செம வைரலாக்கி வருகின்றனர்.