Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர், ஜோத்பூர் மற்றும் உதய்பூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்பு

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர், ஜோத்பூர் மற்றும் உதய்பூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 27 July 2022 3:54:41 PM

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர், ஜோத்பூர் மற்றும் உதய்பூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்பு

ராஜஸ்தான் :இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியவை ஏற்பட காரணமாக அமைகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர், பில்வாரா மற்றும் சித்தோர்கர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. இதனால், அங்குள்ள பகுதிகள் முழுக்க வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

மேலும், அதி கனமழையின் காரணமாக ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் மூட மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ ஹிமான்ஷு குப்தா உத்தரவிட்டுள்ளார்.

heavy rain,rajasthan , கனமழை,ராஜஸ்தான்

இதை அடுத்து ஜோத்பூர் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மட்டுமல்லாமல் வாகனங்கள் அனைத்தும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், ராஜஸ்தானில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அஜ்மீர், ஜோத்பூர் மற்றும் உதய்பூர் z

ஜோத்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கி கிட்டத்தட்ட 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, வெள்ளப்பெருக்கினால் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தில் மூலமாக ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.20,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :