Advertisement

காட்டுத்தீயால் அல்ஜீரியாவில் 25 பேர் உயிரிழப்பு

By: Nagaraj Tue, 25 July 2023 5:46:36 PM

காட்டுத்தீயால் அல்ஜீரியாவில் 25 பேர் உயிரிழப்பு

அல்ஜீரியா: அல்ஜீரியாவில் காட்டுத் தீ காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

algerian government,soldiers,firefighting,mountains ,அல்ஜீரியா அரசு, ராணுவ வீரர்கள், தீயணைக்கும் பணி, மலைப்பகுதி

அந்நாட்டின் 16 மாகாணங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் வனம் மற்றும் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

பெஜாயா மற்றும் பௌய்ரா மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பொதுமக்களில் 15 பேர் வரை பலியாகி உள்ளதாகவும் அல்ஜீரிய அரசு தெரிவித்துள்ளது.

Tags :