Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அட அது காய்ந்து போன கற்றாழைச் செடிங்கப்பா... ஏலியன்ஸ் இல்ல

அட அது காய்ந்து போன கற்றாழைச் செடிங்கப்பா... ஏலியன்ஸ் இல்ல

By: Nagaraj Sat, 17 Dec 2022 09:03:18 AM

அட அது காய்ந்து போன கற்றாழைச் செடிங்கப்பா... ஏலியன்ஸ் இல்ல

தென்ஆப்பிரிக்கா: வித்தியாசமான உயிரினங்கள்... தென்னாப்பிரிக்காவில் கடற்கரையில் வித்தியாசமான உருவ அமைப்பில் உயிரினங்கள் சில நடந்து செல்வது போன்ற படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பூமியை போலவே வேறு சில கிரகங்களிலும் ஜீவராசிகள் வாழலாம் என அறிவியல் அறிஞர்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை மையப்படுத்தி விதவிதமான ஏலியன் படங்கள் வெளியாகி ஹிட் அடித்தன.

cactus plants,south africa,beach,alien,walking ,கற்றாழைச் செடிகள், தென் ஆப்பிரிக்கா, கடற்கரை, ஏலியன், நடந்து செல்வது

அதே சமயம் பூமிக்குள் ஏலியன்கள் மறைமுகமாக வாழ்கின்றன என நம்பும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அவ்வபோது விசித்திரமான படங்கள், வீடியோக்களை பதிவிட்டு அது ஏலியன்கள் என கூறிவரும் நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.

தென்னாப்பிரிக்க கடற்கரையில் பல கால்களை கொண்ட வித்தியாசமான உருவங்கள் நடந்து செல்வது போல அந்த படத்தில் உள்ளது. ஆனால் உண்மையில் அவை ஏலியன் அல்ல என்றும் காய்ந்த கற்றாழை செடிகள் கடற்கரையில் ஒதுங்கிய படமே அது என்றும் அந்த புகைப்படத்தை எடுத்த ஜான் வோர்ஸ்டர் கூறியுள்ளார்.

Tags :
|
|