Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை

By: Nagaraj Wed, 30 Sept 2020 4:07:29 PM

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை

பாபர் மசூதி வழக்கில் அனைவரும் விடுதலை... பாபர் மசூதி இடிக்கப்பட்டு கிட்டத்தட்ட இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் CBI சிறப்பு நீதிமன்றம் இன்று விடுவித்தது.

இதில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் மற்றும் உமா பாரதி ஆகியோரும் அடங்குவர். சதித்திட்டம் தீட்டியதற்கான எந்த ஆதாரமும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்டது, திட்டம் போட்டு செய்யப்பட்ட வேலை இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

அத்வானி, ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் 1992 டிசம்பரில், 15 ஆம் நூற்றாண்டு மசூதி இடிக்கப்படுவதற்கு வழிவகுத்த போராட்டங்களுக்கான சதித்திட்டத்தை தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர்.

liberation,babri masjid,case,advani,security arrangement ,விடுவிப்பு, பாபர் மசூதி, வழக்கு, அத்வானி, பாதுகாப்பு ஏற்பாடு

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 49 பேரில் 17 பேரில் இறந்துவிட்டனர். மீதமுள்ள 32 பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணைக் காலத்தில் உயிர் இழந்த 17 பேரில் பால் தாக்கரே, அசோக் சிங்கால், மஹந்த் அவைத்யநாத், கிரிராஜ் கிஷோர் மற்றும் விஜயராஜே சிந்தியா ஆகியோர் அடங்குவர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின், தீர்ப்பைக் கருத்தில் கொண்டு உ.பி. காவல்துறை முன்னதாக மாநிலம் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலையை அறிவித்தது. நீதிமன்றத்தை ஒட்டிய சாலைகளில் வாகன நடமாட்டம் குறைக்கப்பட்டது. நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகிலுள்ள பெரும்பாலான சாலைகளுக்கு அருகில் மரத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அப்பகுதிகளில் நடமாட்டம் தடை செய்யப்பட்டது. மேலும் கைசர்பாக் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளின் இயக்கம் திசை திருப்பப்பட்டது.

லக்னோ போலீஸ் கமிஷனர் சுஜீத் பாண்டேவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார்.

Tags :
|
|