Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனின் கிழக்குப் பகுதியில் விவசாயப் பணிகள் அனைத்தும் முடக்கம்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் விவசாயப் பணிகள் அனைத்தும் முடக்கம்

By: Nagaraj Thu, 22 Sept 2022 07:56:13 AM

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் விவசாயப் பணிகள் அனைத்தும் முடக்கம்

உக்ரைன்: உக்ரைனின் கிழக்குப் பகுதியில் விவசாயப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இங்கு வயல்கள் மற்றும் கட்டிடங்கள் மீண்டும் மீண்டும் ராக்கெட்டுகள், குண்டுகளால் தாக்கப்படுகின்றன.

ரஷ்யா உக்ரைன் போர்: ஏழு மாத காலமாக, ரஷ்யா - உக்ரைன் யுத்தம் தொடரும் நிலையில், இரு தரப்பிலிருந்தும் பாயும் குண்டுகளாலும் ராக்கெட்டுகளாலும், பெரும் இழப்பும் சேதமும் ஏற்பட்டு வருகிறது.

உக்ரைன் வயல்களில் வெடிக்காத ராக்கெட்டுகள் காணப்படுகின்றன. மேலும் சில ராக்கெட்டுகள் மண்ணில் புதைந்து காணப்படுகின்றன. விவசாயிகள் களைகளை அகற்றும் போது வெடிகுண்டுகள் கிடைக்கின்றன. அவ்வபோது அவை வெடித்து, சேதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் விவசாயப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன.

ukraine,agriculture,vulnerability,russia,attack,grain distribution ,உக்ரைன், விவசாயம், பாதிப்பு,ரஷ்யா, தாக்குதல், தானிய விநியோகம்

இங்கு வயல்கள் மற்றும் கட்டிடங்கள் மீண்டும் மீண்டும் ராக்கெட்டுகள், குண்டுகளால் தாக்கப்படுகின்றன. விவசாயிகள் நிலத்தில் விதைக்கவோ, கோதுமை போன்ற பயிர்களை அறுவடை செய்யவோ முடியாத நிலை உள்ளது. வெரெஸ் பண்ணையில் பண்ணை வணிகத்தை நிர்வகிக்கும் விக்டர் லுபினெட்ஸ், விதைப்பு மற்றும் அறுவடை பணிகளை மேற்கொள்வது மிகவும் கடினம் என்றார்.

போர் முடிந்தாலும் வெடிமருந்து முதலியவற்றை முதலில் வயல்களில் இருந்து அகற்றிய பிறகு தான் விவசாய பணிகளை தொடங்க முடியும் என்றார். போர் முடிவடையும் என்ற நம்பிக்கை இல்லாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். பலவிதமான ஆயுதங்களின் சத்தம் வானில் எதிரொலிக்கிறது. வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் வெடிப்பதால் பூமி நடுங்குகிறது என வருத்தத்துடன் கூடிய லுபினெட்ஸ் "நான் அதற்கு பழகிவிட்டேன்," எனக் கூறினார்.


உக்ரைனின் பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. போருக்கு முன்பு, உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் சுமார் 20 சதவீதத்தையும் ஏற்றுமதி வருவாயில் 40 சதவீதத்தையும் கொண்டிருந்தது என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூறுகிறது.

உக்ரைன் ஐரோப்பாவிற்கான முக்கிய தானிய ஆதாரமாக கருதப்படுகிறது. மேலும் மில்லியன் கணக்கான மக்கள் உக்ரைனை மலிவான தானிய விநியோகத்திற்காக நம்பியிருக்கிறார்கள். ஆனால் பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரைனின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|