Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கடற்கரை- சேப்பாக்கம் வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து

சென்னை கடற்கரை- சேப்பாக்கம் வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து

By: vaithegi Thu, 01 June 2023 2:21:06 PM

சென்னை கடற்கரை-  சேப்பாக்கம் வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து

சென்னை : சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் வழித்தடத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து கொண்டு வருகின்றனர் .தினசரி இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் நிலையில் நாள்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்து கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. 4-வது ரயில் பாதை இல்லாத காரணத்தால் கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவோம் ஏழாவது சூழ்நிலை ஏற்படுகிறது.

chennai beach,chepakkam,trains ,சென்னை கடற்கரை, சேப்பாக்கம் ,ரயில்கள்

இதற்கு இடையே சென்னை கடற்கரை எழும்பூர் 4-வது பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், இந்த திட்டத்தை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 4-வது ரயில் பாதை வழிதடத்தில் பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ஜூலை 1ம் தேதி முதல் வருகிற 2024 ஜனவரி 31ம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :