Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெற உரிமை உள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்

இந்திய மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெற உரிமை உள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்

By: Karunakaran Sat, 24 Oct 2020 10:30:01 PM

இந்திய மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெற உரிமை உள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்றது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டது. அப்போது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார்.

கொரோனா தடுப்பூசியை தேர்தல் வாக்குறுதியில் சேர்த்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக-வின் இந்த தேர்தல் அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது பாஜக-வின் தேர்தல் அறிக்கையை டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்யும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

indian people,corona vaccine,arvind kejriwal,delhi ,இந்திய மக்கள், கொரோனா தடுப்பூசி, அரவிந்த் கெஜ்ரிவால், டெல்ஹி

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும். இது நாட்டு மக்களின் உரிமை ஆகும். மக்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பாஜக-வின் இந்த தேர்தல் அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தாலும், இவ்வாறு அறிக்கை வெளியிடலாம் என முன்னாள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அமெரிக்காவிலும் கொரோனா இலவசமாக மக்கள் போடப்படுவது பி=குறித்தே பிரச்சாரங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :