Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லெபனான் வெடிவிபத்து காரணமாக துறைமுக அதிகாரிகள் அனைவரும் வீட்டுக்காவலில் வைப்பு

லெபனான் வெடிவிபத்து காரணமாக துறைமுக அதிகாரிகள் அனைவரும் வீட்டுக்காவலில் வைப்பு

By: Karunakaran Fri, 07 Aug 2020 08:41:22 AM

லெபனான் வெடிவிபத்து காரணமாக துறைமுக அதிகாரிகள் அனைவரும் வீட்டுக்காவலில் வைப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த 4-ந் தேதி மாலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பெய்ரூட் நகரமே இந்த விபத்தினால் உருகுலைந்தது. அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது. துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி, துறைமுகப்பகுதியே நிலைகுலைந்து போனது. இந்த கோரவிபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து நடுரோட்டுக்கு வந்து, அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இன்றி தவித்து வருகின்றனர்.

port officials,house arrest,lebanon,blast ,துறைமுக அதிகாரிகள், வீட்டுக் காவல், லெபனான், குண்டு வெடிப்பு

துறைமுகத்தில் பாதுகாப்பற்ற சேமிப்புகிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்தான் இந்த விபத்துக்கு காரணம் என்பதை அந்நாட்டு அதிபர் மைக்கேல் அவுன் உறுதி செய்துள்ளதையடுத்து, இந்த விபத்துக்கு காரணம், அதிகார வர்க்கத்தின் அலட்சியப்போக்கு, ஊழல், தவறான நிர்வாகம் ஆகியவைதான் என்று பெய்ரூட் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பல நாடுகள், லெபனானில் பரிதாப நிலையில் உள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன. ஐரோப்பிய நாடுகள், ரஷியா, துனிசியா, துருக்கி, ஈரான், கத்தார் ஆகிய நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்புகின்றன. தற்போது விபத்துக்கு காரணம் என கருதப்படுகிற பெய்ரூட் துறைமுக அதிகாரிகளை அந்த நாட்டு அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளது. மேலும், நாட்டின் சுப்ரீம் பாதுகாப்பு கவுன்சில், இந்த வெடிவிபத்துக்கு காரணமானவர்கள் அதிகபட்ச தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

Tags :