Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் நேபாளத்தில் தடை

இந்தியாவின் அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் நேபாளத்தில் தடை

By: Nagaraj Fri, 10 July 2020 11:38:23 AM

இந்தியாவின் அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் நேபாளத்தில் தடை

நேபாளத்தில் இந்தியாவின் அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

பக்கத்து நாடான நேபாளத்துடன் ஏற்பட்டுள்ள எல்லை முரண்பாட்டால், இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, நேபாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிராக உள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், நேபாள அரசுக்கு எதிராகத் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வதாகக் கூறி, தூர்தர்ஷனை தவிர அனைத்து இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவுடனான மோதல் போக்கை நேபாள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலை மேலும் நீடிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

nepal,indian televisions,private,banned ,நேபாளம், இந்திய தொலைகாட்சிகள், தனியார், தடை

கடந்த சில நாட்களாகவே இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை நேபாள அரசு பரப்பி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேபாளம் குறித்து இந்திய தொலைக்காட்சிகளில் பல்வேறு செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன சீனாவின் ஆணைக்கிணங்க நேபாளம் செயல்பட்டு வருவதாக இந்திய தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியிட்டன.

தற்போது இந்த தடையும் சீனாவின் தூண்டுதலின் பேரிலேயே விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவுக்கு எதிரான நேபாளத்தின் ஒரு சில நடவடிக்கைகளால் நேபாள பிரதமருக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனவும் அதன் காரணமாகவே இந்த திடீர் நடவடிக்கையை எடுத்துள்ளது எனவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

Tags :
|