Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைய வேண்டும்; பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைய வேண்டும்; பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

By: Nagaraj Fri, 24 July 2020 10:56:48 AM

அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைய வேண்டும்; பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

பலமான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினரது ஆதரவு அவசியம். ஆகவே அனைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

திருகோணமலை நகரில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவும், 657 கிராமங்களும் உள்ளன. இம்மாவட்டத்தில் 4 ஆசனங்கள் உள்ளன அவற்றில் இரண்டினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை பொதுத்தேர்தலில் கைப்பற்ற வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து கடற்றொழில் துறைமுகங்களுக்கும் நவீன இயந்திரங்களை வழங்கி அத்துறையை நவீனமயப்படுத்துவது எமது இலக்காகும்.

administration,schools,prime minister,strong government ,நிர்வாகம், பாடசாலைகள், பிரதமர், பலமான அரசாங்கம்

இம்மாவட்டத்தில் அதிகளவில் வளங்கள் காணப்படுகின்றன திருகோணமலை துறைமுகம், புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் என பலதரப்பட்ட வளங்கள் உள்ளன இவையனைத்தும் பாதுகாக்கப்படும். கந்தளாயில் உள்ள சீனி தொழிற்சாலையின் செயற்பாடுகளை வினைத்திறனாக மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் வேறுபாடுகளின்றி முன்னெடுத்துள்ளோம். இனங்களை இலக்காகக் கொண்டு நாங்கள் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவில்லை. வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு என அனைத்து மாகாணங்களிலும் தேவையான மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இம்மாவட்டத்திற்கு 7 தேசிய பாடசாலைகளை நிர்மாணித்துள்ளோம். இம்மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினர் பல்லின சமூகமாக வாழ்கிறார்கள். பலமான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு அனைத்து இன மக்களின் ஆதரவு கட்டாயமாகும். ஆகவே பலமான அரசாங்கத்தையும், அதனுடனான சிறந்த அரச நிர்வாகத்தையும் முன்னெடுக்க அனைத்து இன மக்களும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும். என்றார்.

Tags :