Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செப்.28-ம் தேதி ,அக்.2-ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளும் மூடல்

செப்.28-ம் தேதி ,அக்.2-ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளும் மூடல்

By: vaithegi Tue, 26 Sept 2023 11:39:09 AM

செப்.28-ம் தேதி ,அக்.2-ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளும் மூடல்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாது நபியை முன்னிட்டு வரும் செப்.28-ம் தேதி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்.2-ம் தேதி ஆகிய நாட்களில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளும் மூடப்பட வேண்டும்.

liquor sales,chennai ,மதுபான விற்பனை,சென்னை


மேலும், டாஸ்மாக் கடைகளைச் சேர்ந்த பார்கள், எப்எல்2உரிமம் கொண்ட கிளப்புகளை சேர்ந்த பார்கள், எப்எல்3 உரிமம்கொண்ட ஹோட்டல் பார்கள், எப்எல் 3 ஏ, ஏஏ மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

எனவே இரு தினங்களும்மதுபானம் விற்கக் கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவர் தெரிவித்து உள்ளார்.


Tags :