Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள்அனைவரும் தங்களின் கையெழுத்தை தமிழ் மொழியில் இடவேண்டும் ,, பள்ளிக்கல்வித்துறை

மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள்அனைவரும் தங்களின் கையெழுத்தை தமிழ் மொழியில் இடவேண்டும் ,, பள்ளிக்கல்வித்துறை

By: vaithegi Tue, 23 Aug 2022 1:08:45 PM

மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள்அனைவரும் தங்களின் கையெழுத்தை தமிழ் மொழியில் இடவேண்டும்   ,,   பள்ளிக்கல்வித்துறை

சென்னை: பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்களும் தங்களின் பெயர்களை தமிழ் மொழியிலே இட வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன் படி தமிழ் மொழியில் மாணவர்களின் சேர்க்கை விண்ணப்பம், வருகைப்பதிவேடு, சான்றிதழ் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதையடுத்து தற்போது இதை சுட்டிகாட்டி பள்ளிக்கல்வித்துறை அனைத்து முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

tamil language,students,working teachers,school education department ,தமிழ் மொழி, மாணவர்கள் ,பணியாற்றும் ஆசிரியர்கள்,பள்ளிக்கல்வித்துறை

எனவே இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அத்துடன் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து பதிவுகளிலும் மாணவர்களின் பெயர்களை தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

Tags :