என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் எனக்கு எதிரி கிடையாது .. சீமான் தெரிவிப்பு
By: vaithegi Mon, 25 Sept 2023 10:19:52 AM
சென்னை: நான் புலி; பூனையுடன் சண்டை போட முடியுமா? ... நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி போலீசில் புகார் அளித்தார்.
அப்போது தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனையடுத்து சீமானை வீரலட்சுமி மிக கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பதிலாக கிராமப்புற பெண்களுக்கு ஆடு, மாடு வளர்த்தல் மற்றும் நகர்ப்புற பெண்களுக்கு ஊறுகாய் போட சொல்லி கொடுக்க வேண்டும்.
ஓசியில் ரூ.1,000 கொடுப்பதற்கு பதிலாக கூடை பிண்ணுதல், பூட்டுப்பூச்சி வளர்த்தல், நாட்டுக்கோழி வளர்த்தல், ஆடு மாடு வளர்த்தல் போன்ற தற்சார்பு பொருளாதாரத்திற்கு தள்ளுங்கள். நான் யாரை எதிர்க்கின்றேனோ அவர்கள்தான் எனக்கு எதிரி, என்னை எதிர்ப்பதால் அவர்களுக்கு ஒரு அடையாளம். பூனை சண்டைக்கு கூப்பிட்டால் புலி போகுமா? நான் புலி” என அவர் கூறினார்.