Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த தேதி வரை தமிழகத்திலிருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து

இந்த தேதி வரை தமிழகத்திலிருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து

By: vaithegi Sun, 20 Aug 2023 1:47:14 PM

இந்த தேதி வரை தமிழகத்திலிருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வாரியம் ஆனது வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழகத்திலிருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து ..தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு நாள்தோறும் பல்வேறு நோக்கங்களுக்காக மக்கள் பயணிக்கின்றனர்.எனவே இதற்காக பல்வேறு ரயில்கள் முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரங்கள் இதோ.

tirupati,railway,southern railway board ,திருப்பதி , ரயில்,தெற்கு ரயில்வே வாரியம்


காட்பாடியிலிருந்து திருப்பதிக்கு செல்லும் 07581 பயணிகள் சிறப்பு ரயில், மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு காட்பாடிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 07660 ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்டெர்சிட்டி ரயில் 06854 விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு காலை 5:30 ம்ணிக்கு புறப்பட்டு 21 ஆம் தேதி முதல் காட்பாடியில் நிறுத்தப்படும. மேலும் காட்பாடியில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்.

மேலும் திருப்பதியிலிருந்து காட்பாடிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரயில்கள் அனைத்தும் அடுத்த வாரம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும், திருப்பதி ரயில் நிலையத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :