Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை அதிரடியாக ரத்து செய்தது டில்லி மாநில அரசு

அனைத்து பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை அதிரடியாக ரத்து செய்தது டில்லி மாநில அரசு

By: Nagaraj Sun, 12 July 2020 11:39:30 AM

அனைத்து பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை அதிரடியாக ரத்து செய்தது டில்லி மாநில அரசு

அனைத்துப் பல்கலைக்கழக பருவத் தேர்வுகளும், இறுதியாண்டுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக டில்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவிவரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிகப்பட்டுள்ளனர். டெல்லி மாநில அரசு அனைத்துப் பல்கலைக் கழக பருவத் தேர்வுகளும், இறுதியாண்டுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

கொரொனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதை அடுத்து, நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இனி எப்போது தேர்வுகள் நடைபெறும் என்ற அனைவரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

final year,exam,cancellation,universities,government of delhi ,இறுதி ஆண்டு, தேர்வு, ரத்து, பல்கலைக்கழகங்கள், டில்லி அரசு

இந்த நிலையில், சமீபத்தில் பல்கலைக் கழக தேர்வுகள் மற்றும் கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகள் நடைபெறும் என யுஜிசி அறிவித்து வழிகாட்டி நெறுமுறைகள் வெளியிட்டது. இந்த நிலையில் டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் பல்கலைக் கழகங்களுக்கான தேர்வை நடத்தும் திட்டம் இல்லை. அதற்கான சூழலும் இல்லை என அம்மாநில துணை முதல்வர் மணீஸ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கல்லூரி இறுதி ஆண்டில் முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைத்திருந்தால் அதில் இணைந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Tags :
|