Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் செய்ததில் முறைகேடு என குற்றச்சாட்டு

ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் செய்ததில் முறைகேடு என குற்றச்சாட்டு

By: Nagaraj Sat, 06 Aug 2022 6:59:39 PM

ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் செய்ததில் முறைகேடு என குற்றச்சாட்டு

மதுரை: பால்முகவர்கள் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு... 'ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்டதில் 1 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளது' என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் தலைவர் பொன்னுச்சாமி தெரிவித்துள்ளதாவது:ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்ட பாலிதீன் கவர் கொள்முதல் செய்ய, முறையான டெண்டர் விடப்படவில்லை.

ஏற்கனவே ஆவின் சார்பில் பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்படும் நிறுவனத்தை தவிர்த்து, 1 கிலோவிற்கு 30 ரூபாய் அதிகம் விலை கொடுத்து, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வகையில் ஆவினில் 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

compensation,crackdown,white paper,authorities,polythene ,இழப்பீடு, கடும் நடவடிக்கை, வெள்ளை அறிக்கை, அதிகாரிகள், பாலிதீன்

ஏற்கனவே, ஆவின் பால் பாக்கெட்டில் அளவை குறைத்து வினியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், சர்வதேச செஸ் போட்டியை வைத்து நடந்துள்ள முறைகேடும் கூடுதல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. டெண்டர் விடாமல் 'ஆர்டர்' கொடுக்க ஆவின் அதிகாரிகளை துாண்டியது யார், எத்தனை ஆயிரம் கிலோ பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்பட்டது,

ஆவினுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆவினுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை அவர்களிடம் வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :