Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புளோரிடாவில் நீச்சல் குளத்தில் நுழைந்த முதலையால் பரபரப்பு

புளோரிடாவில் நீச்சல் குளத்தில் நுழைந்த முதலையால் பரபரப்பு

By: Nagaraj Wed, 14 June 2023 6:26:20 PM

புளோரிடாவில் நீச்சல் குளத்தில் நுழைந்த முதலையால் பரபரப்பு

புளோரிடா: புளோரிடாவில் நீச்சல் குளத்தில் நுழைந்த 10 அடிநீள முதலையால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் புகுந்த சுமார் 10 அடி நீள முதலை வனத்துறையினரால் பிடித்து செல்லப்பட்டது.

புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரிடம் இருந்து, தங்களது வீட்டு பின்புறம் உள்ள நீச்சல் குளத்தில் முதலை ஒன்று கிடப்பதாக வன அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

alligator,forest officials,swimming pool,florida,homeowner ,முதலை, வன அலுவலர்கள், நீச்சல் குளம், புளோரிடா, வீட்டு உரிமையாளர்

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்து கயிறு போன்ற சாதனத்தை முதலை மீது வீசி சுற்றி வளைத்து வன அலுவலர்கள் வெளியே இழுத்தனர்.

அப்போது அவர்களது பிடியில் இருந்து தப்பிக்க முதலை தனது உடலை சுற்றிச்சுற்றி சுழன்றடித்தது. தொடர்ந்து சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த முதலையை பிடித்தனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :