Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு பணிகளுக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு

அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு பணிகளுக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு

By: vaithegi Thu, 14 Sept 2023 2:58:58 PM

அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு பணிகளுக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழக அரசு பள்ளிகளுக்கு ரூ.126.45 கோடி நிதி ஒதுக்கீடு ..தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அரசு பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்காக ரூ. 126.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

மேலும், ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பொறுத்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள தொகையை பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்

allocation of funds,allocation of funds,government school,maintenance work ,நிதி ஒதுக்கீடு,நிதி ஒதுக்கீடு,அரசு பள்ளி,பராமரிப்பு பணி

அதாவது, 1 முதல் 30 எண்ணிக்கையில் படித்து வரும் 9727 பள்ளிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்ததாக, மாணவர்களின் எண்ணிக்கை 31 முதல் 100 வரை இருக்கும் 14,0 40 அரசு பள்ளிகளுக்கு ரூ. 25,000 ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக, மாணவர்களின் எண்ணிக்கை 101 முதல் 250 வரை இருக்கும் 8918 பள்ளிகளுக்கு ரூ. 50,000மும், 251 முதல் 1000 வரை இருக்கும் 4249 பள்ளிகளுக்கு தலா ரூ. 75,000மும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஒவ்வொரு அரசு பள்ளிகளும் எந்தெந்த பயன்பாட்டு செலவினங்கள் செய்யப்பட்டு உள்ளது என்பது பற்றிய அறிக்கையை இயக்குநரகத்தில் பள்ளி நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது..

Tags :