Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 14 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுப்பனவு வழங்கல்

14 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுப்பனவு வழங்கல்

By: Nagaraj Thu, 12 Nov 2020 8:25:10 PM

14 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுப்பனவு வழங்கல்

5000 ரூபாய் பணத்தை வழங்கும் நடவடிக்கை... நாட்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் 14 இலட்சத்து 9 ஆயிரத்து 578 குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு உள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் தமது வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

food items,families,program,relief package ,உணவு பொருட்கள், குடும்பங்கள், வேலைத் திட்டம், நிவாரண பொதி

இந்நிலையில், இதுவரையில் கொடுப்பனவுகள் வழங்கப்படாத குடும்பங்களுக்கு 5000 ரூபாய் பணத்தை வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேநேரம், ஒக்டோபர் மாதத்திலும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலும் தமது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் வேலைத் திட்டமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags :