Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு .. முதல் சுற்று கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு .. முதல் சுற்று கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு நிறைவு

By: vaithegi Fri, 04 Aug 2023 11:12:10 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு ..  முதல் சுற்று கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு நிறைவு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும்தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூலை 16-ம் தேதி வெளியிடப்பட்டது. எனவே அதன் அடிப்படையில், முதல் சுற்று கலந்தாய்வு கடந்த ஜூலை 25-ம் தேதி தொடங்கியது.

இடங்கள் தேர்வு: தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 25,856 வரை (நீட் மதிப்பெண் 720 முதல் 107 வரை) உள்ளவர்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 13,179 வரை (நீட் மதிப்பெண் 715 முதல் 107 வரை) உள்ளவர்கள், www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் பதிவு செய்துஇடங்களைத் தேர்வு செய்தனர்.

mbbs,bds course,allotment ,எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு ,ஒதுக்கீடு

இதனை அடுத்து அதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், நேற்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது தொடர்பான விவரங்கள்சுகாதாரத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து வருகிற ஆக 4-ம் தேதி (இன்று) முதல் முதல் 8-ம் தேதி மாலை 5 மணி வரை இடங்கள் ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணையை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், காலியாக உள்ள இடங்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags :
|