Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநிலத்தில் பள்ளி நேரத்தை மாற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி

மாநிலத்தில் பள்ளி நேரத்தை மாற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி

By: vaithegi Tue, 11 Apr 2023 3:54:00 PM

மாநிலத்தில் பள்ளி நேரத்தை மாற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி

இந்தியா: இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் வெளுத்து வாங்குகிறது. மேலும் இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

எனவே அதன்படி இயல்பான வெப்பநிலையை விட அதிகபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என எச்சரித்துள்ளது. இதில் குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 16 வரை வெப்பநிலை உயரும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதே போன்று, நாளைக்குள் பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என எச்சரித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு இந்த வெப்பநிலை கூடுதலாக 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும் கூறியுள்ளது.

school,temperature ,பள்ளி ,வெப்பநிலை


அதனால் மாநிலத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை என பள்ளி நேரத்தை மாற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி அளித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதே போன்று காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அத்துடன் மாணவர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|