Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதனை செய்து பார்க்க சீன நிறுவனத்திற்கு அனுமதி

கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதனை செய்து பார்க்க சீன நிறுவனத்திற்கு அனுமதி

By: Nagaraj Tue, 23 June 2020 11:11:00 PM

கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதனை செய்து பார்க்க சீன நிறுவனத்திற்கு அனுமதி

சீன அரசு அனுமதி... கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் தடுப்பூசியினை மனிதர்களிடம் பரிசோதித்துப் பார்க்க சீன நிறுவனம் ஒன்றிற்கு அனுமதி அளிக்கப்படடுள்ளது.

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இடைவிடாது முயற்சி செய்து வருகின்றனர். 12க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வெவேறு பரிசோதனை கட்டங்களில் உள்ளன.

china,humans,vaccines,government permits,corona ,சீனா, மனிதர்கள், தடுப்பூசி, அரசு அனுமதி, கொரோனா

இந்நிலையில் சீனாவின் சோங்கிங் ஜிபெய் பயாலஜிக்கல் புரோடக்ட்ஸ் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியினை மனிதர்களிடம் சோதித்து பார்க்க அந்நிறுவனத்திற்கு சீன அரசு அனுமதி அளித்துள்ளது. அன்ஹூய் ஜிபெய் லாங்கோம் சீன நுண்னணுவியல் துறையும் இணைந்து இம்மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டது. சீனாவின் தேசிய மருந்துப் பொருட்கள் நிர்வாகத்துறை இப்பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவில் மட்டும் மனிதர்களிடம் சோதித்துப் பார்க்கக்கூடிய 6 தடுப்பூசி சோதனைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|