Advertisement

பொடுகு பிரச்சனை மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகளை நீக்கும் கற்றாழை!!

By: Monisha Thu, 04 June 2020 1:36:54 PM

பொடுகு பிரச்சனை மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகளை நீக்கும் கற்றாழை!!

கற்றாழை ஒரு குளிர்ச்சி தன்மையுடைய பொருள். இந்த கற்றாழை ஜெல், பல மருத்துவ பயன்களை கொண்டது. பல ஆரோக்கிய பிரச்சனைக்கு தீர்வாக அமைகின்றது. அதுமட்டுமல்லாது பொடுகு பிரச்சனை, முடி உதிர்வு பிரச்சனை நீங்க கற்றாழை ஜெல் மிகவும் பயன்படுகிறது. மேலும் தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு கற்றாழை ஜெல் பெரிதும் பயன்படுகிறது.

தலைமுடி நன்கு வளர ஒரு மடல் கற்றாழையை எடுத்து அவற்றில் உள்ள தோல் பகுதியை நீக்கிவிட்டு, அவற்றில் இதுக்கும் ஜெல்லை எடுத்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கட்டிகள் இல்லாதவாறு அரைத்து கொள்ளவும். பின்பு அரைத்த இந்த கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும்.

beauty tips,dandruff problem,hair loss problem,aloe vera gel ,பொடுகு பிரச்சனை,முடி உதிர்வு பிரச்சனை,கற்றாழை ஜெல்

இப்பொழுது இந்த ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து தலைமுடியின் வேர்பகுதில் நன்றாக ஸ்ப்ரே செய்து, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து தலை அலச வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் தலைமுடி நன்றாக வளரும், பொடுகு பிரச்சனை இருக்காது, முடி உதிர்வு பிரச்சனை இருக்காது. இருப்பினும் இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்ய வேண்டும்.

Tags :