Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிக்டாக் குறித்து ஊழியர்களுக்கு தவறாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக அமேசான் விளக்கம்

டிக்டாக் குறித்து ஊழியர்களுக்கு தவறாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக அமேசான் விளக்கம்

By: Nagaraj Sun, 12 July 2020 5:55:51 PM

டிக்டாக் குறித்து ஊழியர்களுக்கு தவறாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக அமேசான் விளக்கம்

தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டு விட்டது... டிக்டாக் செயலியை செல்போனிலிருந்து அகற்றுமாறு தங்கள் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பட்டுவிட்டதாக அமேசான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் ஐடி பிரிவினர் அனுப்பிய மின்னஞ்சலில், ஜூலை 10ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை தங்கள் செல்போனில் இருந்து அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

techtalk,policy,email,amazon,staff ,டிக்டாக், கொள்கை, மின்னஞ்சல், அமேசான், ஊழியர்கள்

அவ்வாறு அகற்றா விட்டால் அமேசான் இமெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த செய்தி காட்டுத்தீயென பரவிய நிலையில், அந்த மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டதாகவும், அதுபோல் டிக்டாக்குக்கு தங்கள் நிறுவனம் தடை ஏதும் விதிக்கவில்லை என்றும் அமேசான் விளக்கமளித்துள்ளது.

மேலும் டிக்டாக் தொடர்புடைய தங்கள் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|