Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 20 ஆயிரம் பேரா... அதிர்ச்சி கொடுக்க தயாராகிறது அமேசான் நிறுவனம்

20 ஆயிரம் பேரா... அதிர்ச்சி கொடுக்க தயாராகிறது அமேசான் நிறுவனம்

By: Nagaraj Tue, 06 Dec 2022 5:43:38 PM

20 ஆயிரம் பேரா... அதிர்ச்சி கொடுக்க தயாராகிறது அமேசான் நிறுவனம்

நியூயார்க்: ஊழியர்கள் அதிர்ச்சி... பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தங்களின் ஊழியர்களில் 20 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக பிரபல நிறுவனங்களான மெட்டா, ட்விட்டர் உள்ளிட்டவை தங்கள் பணியாளர்கள் பலரை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்நிலையில், அந்த வரிசையில் அமேசானும் சேர்ந்துள்ளது. சமீப காலமாக உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக இத்தகைய பணிநீக்கம் நடப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக அமேசான் 10 ஆயிரம் பணியாளர்களை நீக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 20 ஆயிரம் பணியாளர்களை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10000 employees,amazon,suspend,action,first level,personnel ,அமேசான், பணிநீக்கம், நடவடிக்கை, முதல் நிலை, பணியாளர்கள்

இந்த பணிநீக்கம் முதல் நிலை பணியாளர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து துறைகளிலும் இந்த பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அமேசான் சரித்திரத்திலேயே ஒரே சமயத்தில் இத்தனை பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்தப்படும் பணி நீக்க நடவடிக்கைகளால் ஐடி ஊழியர்கள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Tags :
|
|