Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வீடுகளுக்கே நேரடியாக மது வழங்க அமேசான் நிறுவனத்திற்கு அனுமதி

வீடுகளுக்கே நேரடியாக மது வழங்க அமேசான் நிறுவனத்திற்கு அனுமதி

By: Nagaraj Sat, 20 June 2020 9:55:12 PM

வீடுகளுக்கே நேரடியாக மது வழங்க அமேசான் நிறுவனத்திற்கு அனுமதி

வீடுகளுக்கே செல்லும் மது... மேற்கு வங்கத்தில் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மது வழங்குவதற்கு அமேசான் நிறுவனமும் தகுதி பெற்றுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

உரிமம் பெற்ற சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து மதுபானங்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கத் தகுதியான நிறுவனங்கள் விருப்பம் தெரிவிக்கலாம் என மேற்கு வங்க அரசு கடந்த மாதம் அறிவித்தது.

customers,amazon,understanding,brewery,homes ,வாடிக்கையாளர்கள், அமேசான், புரிந்துணர்வு, மதுபானம், வீடுகள்

இதையடுத்துப் பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்த நிலையில், அமேசான், பிக் பாஸ்கட் ஆகிய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. அதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையொப்பமிட வருமாறு இரு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நாட்டின் சில நகரங்களில் ஸ்விக்கி, சொமேட்டோ ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று மதுபானங்களை வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளன.

Tags :
|