Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அம்பேத்கர் அரசியலை கையில் எடுத்துள்ள தெலுங்கானா முதல்வர்

அம்பேத்கர் அரசியலை கையில் எடுத்துள்ள தெலுங்கானா முதல்வர்

By: Nagaraj Sat, 15 Apr 2023 1:15:45 PM

அம்பேத்கர் அரசியலை கையில் எடுத்துள்ள தெலுங்கானா முதல்வர்

சென்னை: அம்பேத்கருக்கு சிலை, தலைமைச் செயலகத்திற்கு அம்பேத்கர் பெயர் என்று தெலுங்கானா முதல்வர் அம்பேத்கர் அரசியலை கையிலெடுத்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதற்குள் தென்னிந்தியா முழுவதுமுள்ள தலித் அமைப்புகளை ஒருங்கிணைக்க சந்திரசேகர் திட்டமிடுவதாக செய்திகள் வருகின்றன.

நேற்று அம்பேத்கர் ஜெயந்தியைத் தொடர்ந்து தெலுங்கானா அரசு, பெரிய அளவில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஐதராபாத் நகரத்தில் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதிடிய விரைவில் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்.டி.ஆர் கார்டன் பகுதியில் அம்பேத்காருக்கான சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சிலையை என்.டி.ஆருக்கு அமைக்கப்போவதாக சந்திரபாபு நாயுடு சொல்லி வந்த நிலையில் தேர்தலில் ஆட்சியை இழந்தார். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் என்.டி.ஆர் சிலைக்கான ஏற்பாடுகளை செய்யப்போவதாக தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் குறுகிய காலத்தில் தெலுங்கானாவில் அம்பேத்காருக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் நலத்துறைக்கான நிதியுதவியை பயன்படுத்தி துரித கதியில் ஒரே ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நேற்று நடந்த விழாவில் 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கலந்து கொண்டார்.

legislature,resolution of attention,effectively,should deal with,andhra ,சட்டமன்றம், கவனஈர்ப்பு தீர்மானம், திறம்பட, கையாள வேண்டும், ஆந்திரா

தெலுங்கானா அரசு திறந்து வைத்துள்ள அம்பேத்கர் சிலையை தலித்து அமைப்புகள் பாராட்டி வருகின்றன. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை பாராட்டியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் நிறுவனர் திருமாவளவன், அவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா முதல்வரை திருமாவளவன் பலமுறை சந்தித்து பேசியிருக்கிறார். தலித் மக்களுக்கான நல்வாழ்விற்கான செயல்திட்டங்கள் எப்படி நடைமுறைப்படுததப்படுகிறது என்பதை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். தன்னுடைய சந்தேகங்களுக்கு தெலுங்கானா முதல்வர் பதிலளித்ததாகவும், தலித் மக்களின் மேம்பாட்டுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்திரா காந்தி காலத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கான துணைத்திட்ட நிதியை சரியாக பயன்படுத்துவதில் இன்றும் சிக்கல் நீடிக்கிறது. இதை தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்து அரசுகள் திறம்பட கையாள்வதாகவும், அதே போன்று தமிழக அரசுவும் திறம்பட கையாள வேண்டும் என்று தோழமையுடன் சுட்டிக்காட்டியவர், சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Tags :