Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா நோயாளிகளுக்கு அழைத்த 10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சேவை

கொரோனா நோயாளிகளுக்கு அழைத்த 10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சேவை

By: Monisha Tue, 04 Aug 2020 09:59:38 AM

கொரோனா நோயாளிகளுக்கு அழைத்த 10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சேவை

தமிழகத்தில் அவசரகால உதவிகளுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையில் 942 நான்கு சக்கர வாகனங்கள், 41 இரண்டு சக்கர வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கிய முதல், கொரோனா நோயாளிகளை கொண்டு செல்ல பிரத்யேகமாக 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் பணியாற்றும் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மருத்துவ உதவியாளர்கள் பலர் அடுத்தடுத்து கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகினர். இதனால் ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கு கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு அழைத்த 10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் கிடைக்கும் என 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் அறிவித்துள்ளது.

corona virus,patients,ambulance,training,time delay ,கொரோனா வைரஸ்,நோயாளிகள்,ஆம்புலன்ஸ்,பயிற்சி,கால தாமதம்

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் கூறியதாவது:- கடந்த 3 மாதத்தில் மட்டும் சென்னையில் 32 ஆயிரத்து 64 கொரோனா நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சென்னையில் மட்டும் சராசரியாக 300-க்கும் மேற்பட்ட அழைப்புகள் 108 ஆம்புலன்சின் கொரோனா சிறப்பு மையத்துக்கு வருகிறது.

இந்த ஆம்புலன்சில் பணியாற்றும் ஓட்டுனர் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர்களுக்கு கொரோனா நோயாளிகளை கையாள்வதற்கு என சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவசர உதவிக்காக கட்டுப்பாட்டு அறையை அணுகிய 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் அவர்கள் இருக்கும் இடத்திற்கு விரைந்து வந்து நோயாளிகளின் தன்மைக்கேற்ப தகுந்த மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags :