Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் மக்கள் மாஸ்க் அணிவதை கவர்னர்கள் கட்டாயமாக வேண்டும் - ஜோ பிடன்

அமெரிக்காவில் மக்கள் மாஸ்க் அணிவதை கவர்னர்கள் கட்டாயமாக வேண்டும் - ஜோ பிடன்

By: Karunakaran Fri, 14 Aug 2020 12:13:03 PM

அமெரிக்காவில் மக்கள் மாஸ்க் அணிவதை கவர்னர்கள் கட்டாயமாக வேண்டும் - ஜோ பிடன்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். கொரோனா வைரஸ், கருப்பின மக்களின் போராட்டம் போன்றவை அமெரிக்க தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமான பொதுமக்கள் மாஸ்க் அணியும் நடைமுறை அமெரிக்காவில் கட்டாயமாக்கப்படவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் மக்கள் முகமூடி அணிவதை கட்டாயமாக்கும் உரிமை மாகாண கவர்னர்களிடமே உள்ளதாக தெரிவித்தார்.

america,governors,corona mask,joe biden ,அமெரிக்கா, கவர்னர்கள், கொரோனா மாஸ்க், ஜோ பிடன்

தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ், பல்வேறு பகுதிகளில் ஆதரவாளர்களை சந்தித்து வீடியோ கான்பிரஸ் மூலமாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேற்று வில்மிங்டன் நகரை சேர்ந்த சுகாதாரத்துறை ஆலோசகர்களிடம் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் வீடியோ கான்பிரஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேசிய ஜோ பிடன், வீடுகளை விட்டு வெளியே செல்லும் அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். இந்த நடைமுறையை தொடர்ந்து 3 மாதங்கள் கடைபிடிக்கவேண்டும். அனைத்து மாகாண கவர்னர்களும் மக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். நமது பாடங்களை நாம் கற்றுக்கொண்டோம் என நம்புகிறேன். அதிபர் டிரம்ப்பும் அவரது பாடங்களை கற்றுக்கொண்டார் என நம்புகிறேன் என்று கூறினார்.

Tags :