Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும்

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும்

By: Nagaraj Sat, 11 Feb 2023 5:06:50 PM

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும்

வாஷிங்டன்: உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும்,” என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரின் 353வது நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.

இதனிடையே, இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்குவதோடு, அமெரிக்காவும் மேற்குலகும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

modi america,president,prime minister,putin,ukraine,war, ,அதிபர், உக்ரைன், பிரதமர், புதின், போர், மோடிஅமெரிக்கா

ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் இந்தப் போர் பல மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை இந்திய பிரதமர் மோடி தடுத்து நிறுத்த காலதாமதம் ஆகிவிட்டதா? என்று நிருபர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், இந்த போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றார்.

அதிபர் புதினை சமாதானப்படுத்த பிரதமர் மோடிக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். போரை நிறுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடியிடம் விட்டுவிடுகிறேன். “உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும்,” என்று அவர் கூறினார்.

Tags :
|
|