Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செப்டம்பர் 7ம் தேதியுடன் 4 முக்கிய நகரங்களுக்கான விமான சேவையை ரத்து செய்ய உள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

செப்டம்பர் 7ம் தேதியுடன் 4 முக்கிய நகரங்களுக்கான விமான சேவையை ரத்து செய்ய உள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

By: vaithegi Wed, 22 June 2022 9:26:56 PM

செப்டம்பர் 7ம் தேதியுடன் 4 முக்கிய நகரங்களுக்கான விமான சேவையை ரத்து செய்ய உள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

சென்னை : உலகம் முழுவதும் சீனாவின் பிறப்பிடமான கொரோனா பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு எதிராக பல்வேறு வகையான தடுப்பூசி மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து முன்பை விட வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து தற்போது ஓரளவு கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா கால கட்டத்தில் அமெரிக்காவில் பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

மேலும் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதனால் சில விமான நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கினர். அத்துடன் சில ஊழியர்களை காத்திருப்பில் வைத்தனர்.

airlines,corona,american airlines ,விமான சேவை,கொரோனா ,அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்

ஆனால் ஊழியர்கள் வேறு பணிகளுக்கு செல்ல தொடங்கி விட்டனர். ஆனால் தற்போது கொரோனா கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு விமான சேவைகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் விமான நிறுவனங்கள், தற்போது கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டியுள்ளது. அதனால் விமானங்களை இயக்க விமானிகள் இல்லாமல் தவிக்கின்றனர்.

அதன் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் கடந்த சில நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது விமானிகள் பற்றாக்குறை நீடித்து வருவதால் பல முக்கிய விமான சேவைகளை நிறுத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் 7ம் தேதியுடன் 4 முக்கிய நகரங்களுக்கான விமான சேவையை ரத்து செய்ய உள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையடுத்து சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் செப்டம்பர் 5ம் தேதி வரை 20000 விமான சேவைகளை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் டெல்டா நிறுவனம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை என நாள் ஒன்றுக்கு 100 விமான சேவைகளை நிறுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|