பட்டதாரி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய அமெரிக்க கோடீஸ்வரர்
By: Nagaraj Mon, 29 May 2023 11:50:26 AM
பாஸ்டன்: பட்டதாரி மாணவர்களுக்கு பரிசு... அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அமெரிக்க கோடீஸ்வரர் ராபர்ட் ஹேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டம் பெற்ற 2 ஆயிரத்து 500 பட்டதாரி மாணவர்களுக்கு தலா ஆயிரம் டாலர் பரிசாக வழங்கினார்.
மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், Granite Communications நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் ஹேல் பங்கேற்று, சிறப்புரையாற்றி பட்டம் பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
தொடர்ந்து, பட்டதாரி மாணவர்களுக்கு தலா 500 டாலர் கொண்ட இரு கவர்களை பரிசாக வழங்கினார். அந்த கவர்களில் ஒன்றில் கிப்ட் என்றும், மற்றொரு கவரில் Give என்றும் எழுதப்பட்டிருந்தது.
Tags :
dollars |
prizes |