Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவை கொண்டாடிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவை கொண்டாடிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்

By: Karunakaran Wed, 05 Aug 2020 2:17:53 PM

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவை கொண்டாடிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்

அயோத்தியில் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியளித்தது. அதன்பின், ராமர் கோவில் கட்ட ‘ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு, இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

இந்நிலையில் இன்று ஆகஸ்டு 5-ந்தேதி ராமர் கோவிலுக்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பல்வேறு இந்து மதத்தலைவர்களும், அரசியல் கட்சியினரும் இந்த விழாவை முன்னிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.

american indians,bhumi puja,ayodhya,ram temple ,அமெரிக்க இந்தியர்கள், பூமி பூஜை, அயோத்தி, ராம் கோயில்

தற்போது, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவை கொண்டாடும் விதமாக, அங்கு வாழும் இந்தியர்கள் பலர் திரண்டு தங்கள் கைகளில் காவிக் கொடிகளை ஏந்தியவாறு ராமரைப் போற்றி கோஷங்களை எழுப்பினர். வாஷிங்டன் நகரில் கேபிடல் ஹில் பகுதியில் ஊர்வலமாக சென்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள் பூமி பூஜை விழாவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சமூக விலகலை கடைபிடித்து, முகக்கவசங்கள் அணிந்தவாறே இந்த ஊர்வலம் நடைபெற்றது. அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பிரதமர் மோடி, ராம ஜென்ம பூமியில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :