Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு கொரோனாவில் இருந்தே ஒரு சிகிச்சையை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானிகள்

கொரோனாவுக்கு கொரோனாவில் இருந்தே ஒரு சிகிச்சையை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானிகள்

By: Karunakaran Wed, 17 June 2020 12:25:12 PM

கொரோனாவுக்கு கொரோனாவில் இருந்தே ஒரு சிகிச்சையை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா கதிகலங்கியுள்ளது. கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியினால், அமெரிக்கா என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளது. நவம்பர் மாதம் 3-ந் தேதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக உள்ளார்.

இன்னொரு பக்கம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது, கொரோனாவுக்கு ஒரு புதிய சிகிச்சை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனாவுக்கு கொரோனாவில் இருந்தே ஒரு சிகிச்சையை இவர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது, கொரோனாபாதித்த நோயாளிகளின் ரத்தத்தில், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும் ‘ஆன்டிபாடி’களை கண்டுபிடித்துள்ளனர்.

american,coronavirus,corona treatment,antibody ,கொரோனா,அமெரிக்க விஞ்ஞானிகள், சிகிச்சை,ஆன்டிபாடி

இந்த ‘ஆன்டிபாடி’க்கு மற்றொரு பெயர் இம்யுனோகுளோபுலின் என்பதாகும். இது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா செல்களால் உருவாக்கப்படுகிற ‘ஒய்’ வடிவ புரதம் ஆகும். இதை விலங்குகள் மற்றும் மனித செல் வளர்ப்பு பரிசோதனையில் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஜோல்லா நகரில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.

இந்த ‘ஆன்டிபாடி’களை உயிரியல் தொழில் நுட்ப முறைகளைப் பயன்படுத்தி ஏராளமாக தயாரித்து, கடுமையான நோயைத்தடுக்கும் ஒரு சிகிச்சையாகவும், நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசியாகவும் பயன்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதே அணுகுமுறை எபோலா வைரஸ் தொற்று பரவலிலும், நிமோனியாவால் பாதிக்கப்படுகிற சுவாச கோளாறிலும் வெற்றிகரமாக செய்து காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :