Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவை விட்டு தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது

போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவை விட்டு தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது

By: Karunakaran Fri, 16 Oct 2020 12:58:35 PM

போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவை விட்டு தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது

அமெரிக்காவில் தமிழர் துரைகந்தன் முருகன் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழர் துரைகந்தன் முருகன், ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அவர் மீது நியூ ஜெர்சி மாகாணத்தில் வழக்கு இருக்கிறது. தற்போது அவர் அமெரிக்காவை விட்டு தப்ப முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவை விட்டு தப்புவதற்காக, சிகாகோ சர்வதேச விமான நிலையத்துக்கு முருகன் வந்தார். வழக்கமான விசாரணைக்காக, எல்விஸ் டயாஸ் என்பவர் பெயரிலான இந்திய பாஸ்போர்ட்டையும், பயண அனுமதி அட்டையையும் அதிகாரிகளிடம் அளித்தார்.

american tamil,arrest,flee us,fake passport ,அமெரிக்க தமிழர், கைது, அமெரிக்கா, போலி பாஸ்போர்ட்

அப்போது அவரது உடைமைகளை பரிசோதித்தபோது, முருகன் பெயருக்குரிய ஆவணங்கள் இருந்தன. உடற்கூறு பரிசோதனையின்போது, அவர் பெயரில் பாலியல் வழக்கு நிலுவையில் இருப்பதை காட்டியது. பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தன் பெயர் முருகன் என்றும், உடல்நலமின்றி இருக்கும் தனது தந்தையை பார்ப்பதற்காக, நண்பரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அமெரிக்காவை விட்டு செல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டார். பின்னர், அவர் கைது செய்யப்பட்டு, நியூ ஜெர்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags :
|