Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரசை கையாளுவதில் டிரம்ப் தோல்வியடைந்து விட்டதாக அமெரிக்கர்கள் கருத்து

கொரோனா வைரசை கையாளுவதில் டிரம்ப் தோல்வியடைந்து விட்டதாக அமெரிக்கர்கள் கருத்து

By: Karunakaran Mon, 03 Aug 2020 09:54:52 AM

கொரோனா வைரசை கையாளுவதில் டிரம்ப் தோல்வியடைந்து விட்டதாக அமெரிக்கர்கள் கருத்து

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை விரைவில் 50 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கையும் 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா காரணமாக அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். மேலும் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டிரம்ப், தீவிரமாக செயல்படாததால் தான் அதன் தாக்கம் அதிகரித்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

americans,trump,corona virus,president ,அமெரிக்கர்கள், டிரம்ப், கொரோனா வைரஸ், ஜனாதிபதி

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் மூன்றில் 2 பங்கு அமெரிக்கர்கள் டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாளும் விதத்தை ஏற்கவில்லை என தெரிய வந்துள்ளது. 2 தினங்களில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 730 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 66 சதவீதம் பேர் ஜனாதிபதி டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாளுவதில் தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கருப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாயிட் போலீசாரால் கொல்லப்பட்ட விவகாரத்தையும் ஜனாதிபதி டிரம்ப் முறையாகக் கையாளவில்லை என மூன்றில் 2 பங்கு அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளதும், ஜார்ஜ் பிளாயிட் கொலையை கண்டித்துநடந்த போராட்டத்தை ஒடுக்க முக்கிய நகரங்களில் மத்திய போலீஸ் படையை டிரம்ப் களமிறக்கியது நிலைமையை மேலும் மோசமாக்கியது என 52 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags :
|